நாம் வாங்கிய அல்லது நமக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்திற்கான பட்டா மாற்றத்திற்கான வழிமுறை பற்றி பார்க்கலாம். நாம் வாங்கிய அல்லது நமக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கை பட்டா என்றால் என்ன? மற்றும் அதன் அவசிங்கள் அறிய படிக்கவும்.
பட்டாவுக்கான விண்ணப்பம், தாலுக்கா/கிராம நிர்வாக அலுவலரிடம் மட்டும் இல்லாமல் பதிவிறக்கம் செய்ய இப்போது www.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
விண்ணப்பித்து கொடுக்கப்படவேண்டிய விசயங்கள்
விண்ணப்பதாரர் பெயர்
தகப்பனார்/கணவர் பெயர்
இருப்பிட முகவரி
பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்வேண்டும்)
மனை அங்கீகரிக்கப்பட்ட மனையா/அங்கீகாரம் இல்லாத மனையா மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்படவேண்டும்)
சொத்து மனுதாரருக்கு எவ்வாறு கிடைக்கப்பட்டது என்ற விவரம் (துவக்கத்தில் கூறப்பட்ட முறைகளில் ஒன்று)
பத்திர ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளதா
சொத்து மனுதாரரின் அனுபவத்தில் உள்ளதா? எவ்விதம் அனுபவத்தில் உள்ளது? (அதற்கான அத்தாட்சி ஆவணங்களின் நகல்கள் இணைக்கபடவேண்டும் அவை, மாநகராட்சி சொத்துவரி செலுத்திய ரசீது/மின் கட்டண அட்டை/குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை/குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்று)
பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தில் ஒரு பகுதியா? அல்லது முழுமையானதா?
பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.
விண்ணப்பத்தைத் தாலுகா/கிராம நிர்வாக அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்றுகொள்ளுதள் அவசியமானது.
எத்தனை நாட்களுக்குள் பட்டா கிடைக்கும்.?
ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்தால் 15 நாட்களிலும், ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி மட்டும் வாங்கியிருந்தால் 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படவேண்டும். நடைமுறையில் மேற்கூறப்பட்டவாறு நடப்பது என்பது அறிது. தொடர்ச்சியாக முயற்ச்சி மேற்கொள்ளுதல் அவசியம்.
எந்த சூழ்நிலைகளில் பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்
பட்டா மாற்றம் என்பது சொத்து வாரிசுரிமைப்படியோ, பாகப்பரிவினை பத்திரபடியோ, உயில் ஆவணத்தின் படியோ, செட்டில்மெண்ட் பத்திரப்படியோ, விற்பனை மூலம் வாங்கியதாக இருந்தாலோ, அன்பளிப்பாக வழங்கபட்டாலோ மாற்றம் செய்து கொள்ளலாம்
பட்டா உடைமையாளர் உயில் ஏதும் எழுதாமல் இறந்துவிடும் தருணத்தில் அவருடைய வாரிசுதாரர்களுக்கு, வாரிசுதாரர்கள் சான்றிதழ் இருக்கும் பட்சத்தில் பட்டா மாற்றம் செய்யப்படும்.
பட்டா உடைமையாளர் உயில் எழுதி இறந்துவிடும் நிலையில், யாருக்கு உயில் எழுதப்பட்டு இருக்கிறதோ, வாரிசுதாரர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், அவருடைய பெயரில், பட்டா மற்றம் செய்யப்படும். வாரிசுதாரர்கள் ஒப்புதல் வழங்காப்பட்சத்தில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதற்கு தகுந்தவாரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பட்டா உரிமையாளர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்ற பட்சத்தில், ஏழு வருடங்களுக்கு பிறகு அதனை வாரிசுதாரர்கள், பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்.
அடுக்குமாடி குடியிருப்பில்/ஃபிளாட்(flat) உள்ளவர்களுக்கு, பட்டா தேவையா?
அடுக்குமாடி குடியிருப்பு பொறுத்தவரை, நிலம் பிறிகப்படாமலே இருக்கும் (undivided Shares). பிரிக்கப்படாத நிலத்திற்கு, தனிப்பட்டாபட்டா வழங்க இயலாது. இருப்பினும் அணைத்து பங்குதாரர்களையும் கொண்டு ஒரு பட்டா பெற இயலும். (கூட்டுப்பட்டா)
No comments:
Post a Comment