TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு! - Asiriyar.Net

Saturday, October 10, 2020

TET, CTET தேர்வில் தேர்ச்சி பெற்ற 8000 ஆசிரியர்கள் ராணுவ பப்ளிக் பள்ளி காலிபணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பு!

 

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 8000


பதவி: Post Graduate Teacher (PGT)

பதவி: Trained Graduate Teacher (TGT)

பதவி:Primary Teacher (PRT)


வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.


அனைத்து விண்ணப்பத்தாரர்களும் CTET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: APS அமைப்பால் நடத்தப்படும் ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும்.


தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 03.12.2018


விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.aps-csp.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.awesindia.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018



No comments:

Post a Comment

Post Top Ad