''பள்ளிகள் திறப்பது குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டு தொடர் அங்கீகாரம் அரசாணை வழங்கும் விழா, திருப்பூர், பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 571 பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகார ஆணை வழங்கினார்.
விழாவில், அமைச்சர் பேசியதாவது:
பள்ளி கட்டட அனுமதி பெறும் நடைமுறையில் மாற்றம் கோரும் தனியார் பள்ளிகள் தங்கள் ஆலோசனையை வழங்கலாம். ஏற்கப்படும் பட்சத்தில் நிரந்தர அங்கீகாரம் தரவும் அரசு தயாராக உள்ளது. அரசு பள்ளிகளில், டிச.,மாதத்துக்குள், 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 8,828 'அடல் டிங்கரிங் ஆய்வகம்' அமைக்கப்படும்.மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment