ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, October 21, 2020

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

 





ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல மாதங்களாக பல்வேறு துறைகள் முடங்கி இருந்த நிலையில், தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி இருப்பதால் மீண்டும் கடுமையான ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தியாவிலும் கொரோனா இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தொற்று முற்றிலுமாக இன்னும் நீங்கவில்லை,  பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டுள்ளார். 



இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து  ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.




ஒற்றைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் (1,3,5,7,9,11), இரட்டை படை எண்கள் கொண்ட வகுப்புகள் (2,4,6,8,10,12) ஒரு நாளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 


நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad