மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, October 21, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

 





மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.












அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாகவும் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


மேலும், தீபாவளி போனஸ், வரும் விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad