தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பணி நியமன ஆணை மற்றும் கல்வி சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த மிட்டஅல்லி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ராஜேந்திரன் இவர் பத்தாம் வகுப்பு படிக்காமலேயே போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் பணி நியமன ஆணைகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது மேலும் நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணை நகல் பணிவரன்முறை தகுதிகாண் பருவம் செய்யப்பட்ட ஆணையின் நகலை அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நகலை ஆகியவற்றை பெற்று அதனை சரிபார்த்து அதன் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் அத்துடன் இந்த சான்றிதழ்களின் நகல்களை சிஇஓ அலுவலகத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
No comments:
Post a Comment