BEO - அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - Asiriyar.Net

Tuesday, October 20, 2020

BEO - அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

 





குளச்சல் வெள்ளங்கட்டியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் பாட புத்தகங்களை விநியோகம் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 



சோதனையில் அங்கிருந்த வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜிடம் ரூ.54,060ஐ கைப்பற்றினர். அரசின் இலவச பாட புத்தகங்களை தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் விநியோகம் செய்ய முறைகேடாக பெற்ற தொகை என்பது விசாரணையில் தெரியவந்தது. மாலை 4 மணிக்கு நடைபெற்ற சோதனை இரவு 7 மணி வரை தொடர்ந்தது.





No comments:

Post a Comment

Post Top Ad