Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 27, 2020

அரசுப் பணியாளர் பணி பதிவேட்டில் பிறந்த தேதி மாற்றம் - மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 






காவல்துறை ஐ.ஜி கணே சமூர்த்தியின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்ட தனிநீதிபதி யின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள் ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது .  தமிழககாவல்துறையில் ஐ.ஜி.யாகபதவி வகித்து வருபவர் எம்.டி.கணேசமூர்த்தி . 


இவர் கடந்த 1991 - ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.இவரதுகல்விச்சான்றிதழ்களில் பிறந்த தேதி 20.10.1961 என குறிப்பிடப்பட் டிருந்தது . கணேசமூர்த்தி சென்னை எழும் பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 10.10.1962 அன்று பிறந்துள்ளார் . அதுதொடர்பாக சென்னை மாநகராட்சி யில் கடந்த 1962 - ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது . தன் னுடைய பிறந்த தேதியை மாற்றக்கோரி கணேசமூர்த்தி தமிழக அரசிடம் முறையிட் டார் . அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட் டது . 



இதனையடுத்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது . இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார் . வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதி பதி , கணேசமூர்த்தியின் 3 அண்ணன்கள் , 2 தங்கைகள் பிறந்த தேதி தொடர்பான ஆவ ணங்களைப் பரிசீலித்து , கணேசமூர்த்தி யின் பணிப்பதிவேட்டில் பிறந்த தேதியை 10.10.1962 என மாற்ற தமிழக அரசுக்கு உத் தரவிட்டார் . 


இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் தது . இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிப திகள் , ஆர்.சுப்பையா , சி.சரவணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதி பதிகள் , தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர் . தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளு படி செய்தனர் .

No comments:

Post a Comment

LightBlog