பார்வையில் காணும் செயின் முறைகளின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு இணையம் வழியாக NISHTHA பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரசு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணிபுரியும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு களை கையாளும் ஆசிரியர்களுக்கு இக்கல்வி ஆண்டில் இணைய வழியாக கட்டணமில்லா பயிற்சி வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது 15 நாட்களுக்கு 3 வகையான பயிற்சி என்ற அடிப்படையில் அக்டோபர் 16 முதல் 2021 ஜனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு இணைப்பில் உள்ளவாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குனர் மற்றும் வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை அலுவலர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்கும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment