பள்ளி மாணவா்கள் குறித்த விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விவரம் ‘எமிஸ்’ வலைதளம் வழியாகவே கையாளப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலான தனியாா் பள்ளிகள், மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’தளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளியில் இடைநின்றவா்கள், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்று விலகிய மாணவா்களின் விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் இருந்து உடனுக்குடன் நீக்கப்படவேண்டும். பெரும்பாலான பள்ளிகள் அவ்வாறு செய்யாததால் கடந்த ஆண்டு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதைதவிா்க்க, ‘எமிஸ்’ தளத்தில் மாணவா்களின் விவரங்களை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘எமிஸ்’ தள செயல்பாடுகளை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.
No comments:
Post a Comment