வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 16, 2019

வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..





தேர்தல் பணியாற்றுகின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.....
1. நம்மிடம் பேச்சு கொடுத்துத் தேவையில்லாத பிரச்சனைகளை வாக்கெடுப்பின்போது நமக்கு எதிராகத் தூண்டிவிட்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றலாம் ..
ஆகவே அமைதி காத்துத் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் கவனம் செலுத்துக.

2.நாம் பணிபுரியும் இடத்தில் நமக்கு அறிமுகமில்லாதவர்களிடம் கட்சி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

3.வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒருமித்த ஒற்றுமை உணர்வுடன் பணியை மேற்கொள்ள வேண்டும்.

4.நம் மனநிலை இதுதான் என்று மற்ற கட்சிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே வாக்குச் சாவடி முகவர்களிடம் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாதீர்கள்

 5.கூடுமானவரை ஆறு வேளைக்குமான  உணவினைத் தயார் செய்துகொண்டு எடுத்துச் செல்லுங்கள் .யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்.ஆசிரிய நண்பர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு உண்க .

7.நமக்கே தெரியாமல் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு எப்போதும் குழுவாக இயங்குக .தனித்து எங்கும் செல்ல வேண்டாம்.

8.வாக்குச் சாவடியில் உள்ள நம் ஆசிரியர்களைத் தவிர்த்து யாருடனும் வீணான பேச்சுவார்த்தைகளை வைத்துக்கொள்ள வேண்டாம்.

9.மக்கள் யாருக்காக அதிகம் வாக்களித்துள்ளார்கள் என்று எவரேனும் கேட்டால் எங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியாது என்ற விடை கூறுங்கள்.

10.பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் எனவரும் வாக்காளர்களை உதவி செய்கிறேன் என்ற பாங்கில் கவனத்துடன் நடந்து கொள்க.

11.அறிமுகம் இல்லாதவர்களிடம் உணவைப் பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் 

12.தேர்தல் பணிக்குச் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும் 

 13.வாக்குச்சாவடி முகவர்களை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாளுங்கள். அவர்களிடம் நம்மைப்பற்றி ஒரு சார்பு கட்சிகள் தவறான எண்ணத்தைப் பதிவிட்டு இருக்கிறது.

14.எதிர்பாராமல் வருகின்ற பிரச்சனைகளை ஒருமித்த உணர்வுடன் எதிர்கொள்ளுங்கள்.

15.பிற கட்சிகள் நம்மைத் தவறாக புரிந்து கொண்டு நம்மை அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப இயக்கவும் திட்டமிட்டிருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

13.தேர்தல் பணியில் நம்முடைய செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடுநிலைமையுடன் உள்ளதாகவே இருக்குமாறு பார்த்துக் கொள்க.

14.தேர்தல் அலுவலர்கள் PO வைத்தவிர செல் போன் அறவே தவிருங்கள். பல பிரச்சனைகளுக்கும் நம் கவனம் சிதற வாய்ப்பாய் அமைந்துவிடும்.
15.யாரும் அச்சமூட்டுவதாக எண்ண வேண்டாம். நம் உயிருக்கும் உடைமைக்கும் நாமே பொறுப்பு .

Post Top Ad