வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படுவது இப்படித்தான்! - Asiriyar.Net

Friday, April 19, 2019

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படுவது இப்படித்தான்!



'எப்படி ஒரு வேட்பாளரின் பெயர் மட்டும் சின்னத்துடன் முதல் பெயராக வருகிறது? இத்தனைக்கும் இது அகர வரிசைப்படியும் இருப்பதாகத் தெரியவில்லை. வாக்களிக்கச் செல்லும்போது இப்படியொரு சந்தேகம் நமக்கு நிச்சயமாக ஏற்படும். உதாரணமாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 40 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.



இவர்களில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் குமாரின் பெயர் யானை சின்னத்துடன் முதலிடத்திலும், தி.மு.க வேட்பாளர் சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனின் பெயர், உதயசூரியன் சின்னத்துடன் இரண்டாவது இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் பெயர் இரட்டை இலைச் சின்னத்துடன் மூன்றாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. அதன்பிறகே மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க (சுயேச்சை) வேட்பாளர்களின்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 



40 பேர் போட்டியிடும் இந்தத் தொகுதியில், வேட்பாளர்களின் பெயர்கள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன? தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு வரையறையை வைத்துள்ளது. முதலில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், இரண்டாவதாகத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள், மூன்றாவதாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ள கட்சிகள், நான்காவதாக சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பிடிக்கின்றன. அதன்பிறகே, அகர வரிசைப்படி பெயர்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான், ஒரு வேட்பாளரின் பெயர் வாக்கு இயந்திரத்தில் தனக்கான இடத்தைப் பிடிக்கிறது. 

Post Top Ad