கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 2ம் வகுப்பிற்கான சேர்க்கை துவக்கம்..! - Asiriyar.Net

Wednesday, April 3, 2019

கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 2ம் வகுப்பிற்கான சேர்க்கை துவக்கம்..!


மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவாகும். அதன்படி, தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளியில், இரண்டாம் வகுப்பு சேர்க்கைகான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகிறது.


நாடு முழுவதும் சுமார் 1,137 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு மூலம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்குவதால் இந்த பள்ளிகளில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை சற்று அதிகம்.

சமீபத்தில் இப்பள்ளியில் 1-ஆம் வகுப்புகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று முதல் இரண்டாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்கள், kvsonlineadmission.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விபரங்கள் ஏப்ரல் 12 தேதி வெளியிடப்படும். ஏப்ரல் 30ம் தேதி வரை சேர்க்கை நடைபெறும்.

Post Top Ad