School Morning Prayer Activities - 15.06.2022 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 15, 2022

School Morning Prayer Activities - 15.06.2022

 




திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்:நட்பியல்

அதிகாரம்: மருந்து


குறள் : 946


இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.


பொருள்:

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை


பழமொழி :

Make no fire, raise no smoke.

நெருப்பின்றி புகையாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.


2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.


பொன்மொழி :


வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும் - டிஸ்ரேலி


பொது அறிவு :


1. கண் விழித்தே தூங்கும் உயிரினம் எது?


 டால்பின். 




2. தலையை வெட்டினாலும் 9 நாட்கள் உயிர் வாழும் உயிர் எது? 


கரப்பான் பூச்சி.


English words & meanings :

Canoe -a light, narrow boat. Noun. ஓடம், மிதவை, சிறிய படகு. பெயர் சொல்


ஆரோக்ய வாழ்வு :


திரிபலா சூரணம் ஒரு இயற்கையான மலமிளக்கி ஆகும். இது நாள்பட்ட மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மற்ற மலமிளக்கியை போல் அல்லாமல் திரிபலா ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.  உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.பொதுவாக, இது அனைவராலும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது. சாதாரண வாய்ப்புண்ணிலிருந்து, வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இந்தக் காலத்தில் இதை சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமல் தடுக்க ஆரோக்கியமானவர்களும் இதைத் தினமும் எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடம்புக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்.


NMMS  SCIENCE - Q 3


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி: 


21,28,33, ? , 37. 


விடை: 36


ஜூன் 15 - உலகக் காற்று நாள் (World Wind Day) 


உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.[1] இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.


நீதிக்கதை


துளையிட்ட காசு


அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். 


ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். 


அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். 


சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!


அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். 


அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். 


இது எப்போது நடந்தது? என்று கேட்டான். 


அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். 


அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !


இன்றைய செய்திகள் - 15.06.2022


★"பள்ளிகளில் செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டுவந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


★வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு.


★டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: தொழில்நுட்ப மையங்களாக மாறும் தொழிற்பயிற்சி நிலையங்கள்.


★ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி: அறிமுகமாகிறது ஷார்ட் சர்வீஸ் ரூட்; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.


★குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அறிவுறுத்தல்.


★இலங்கையில் மீண்டும் நெருக்கடி: இனி ரேஷன் முறையில் பெட்ரோல்- டீசல்: அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை.


★சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


★சர்வதேச பாரா நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜெர்மனி வீரர்.


★உலக இளையோர் பளுதூக்குதல்: இந்திய வீரர் குருநாயுடு சனாபதி தங்கம் வென்று சாதனை.


★ஏ.டி.பி டென்னிஸ் தரவரிசை : நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி மெத்வதேவ் முதலிடம்.



Today's Headlines


★ "Cell phones will never be allowed in schools. If anyone brings a cell phone, it will be confiscated. The cell phone will not be returned," said School Education Minister Anil Magesh.


 ★ Weather forecast: Heavy rain is likely to fall in 16 districts of Tamil Nadu today.


 ★ Government of Tamil Nadu made a treaty with Tata: Vocational Training Centers are to become Technology Centers.


 ★ 4 years of service in the Army: Introducing the Short Service Route;  Official announcement soon.


 ★ Vaccinate children - Union Minister Mandavia's advices states.


 ★ Crisis again in Sri Lanka:  petrol-diesel on ration basis only: 3 days leave for government employees.


 ★ The United Nations says more than 100 people have been killed in clashes between two ethnic groups in Sudan.


 ★ German world record holder in the international para long jump.


 ★ World Youth Weightlifting: Indian athlete Gurunayadu Sanapathy wins gold.


 ★ ATP Tennis Rankings: Medvedev tops by pushing down Novak Djokovic

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்




Post Top Ad