ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் CEO சஸ்பெண்ட்! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 1, 2022

ஓய்வு பெறுவதற்கு முதல் நாளில் CEO சஸ்பெண்ட்!பள்ளிக் கல்வியில் பணியாற்றிய முதன்மை கல்வி அலுவலர் ஒருவர், ஓய்வு பெறும் முதல் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சி வந்ததும், ஓய்வு பெறும் நாள் அல்லது அந்த மாதத்தில், அரசு ஊழியர்களை, சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கை கைவிடப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. 


இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறையில், முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு வகித்த முத்துக்கிருஷ்ணன், நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு முதல் நாள், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலக பொறுப்பாளரான இவர், ஏற்கனவே அரியலுார் மாவட்ட சி.இ.ஓ., மற்றும் பள்ளிக்கல்வி தலைமை அலுவலக துணை இயக்குனராக பணியாற்றியவர். 


இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்ததால், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Post Top Ad