ரூ.3 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி - சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 3, 2022

ரூ.3 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி - சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

 வருகிற கல்வியாண்டில் இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: 


ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-11ம் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், வருகிற 2022-23 கல்வியாண்டில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.


 விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.unom.ac.in என்ற இணையதளம் சென்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு மேற்கூறிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி

+2 முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் https://www.unom.ac.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் 


சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு :Post Top Ad