மலை சுழற்சி வழக்கு விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 30, 2022

மலை சுழற்சி வழக்கு விவரம்

 




இன்று 29.04.2022 வழக்கு விசாரணைக்கு வந்தது விசாரணையில் 176 அரசாணை நிலை எண் படி முன்னர் நடத்தப்பட்டு வந்த 404- மலை சுழற்சி அரசாணை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.*


*அதன் பின்பு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 404 அரசாணை பழைய முறைப்படி பின்பற்றப்படும் என்று கடிதம் வெளியிட்டிருந்தார்.*


*அதனை எதிர்த்து திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பள்ளிக்கல்வி செயலாளர் வெளியிட்ட அரசாணை தாண்டி தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் இல்லாததால் அவர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.*


*அதன் பின்பு 176 அரசாணையில் திருத்தமாக பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களால் தொடக்க கல்வித்துறையில் 404 அரசாணைப்படி மலை சுழற்சி நடைபெறும் என அரசாணை 12 பிறப்பிக்கப்பட்டது.


*இன்று ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் வழக்கறிஞர் மதிப்பிற்குரிய திரு.சங்கரன் அவர்கள் ஆஜராகி வாதிட்டுள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் சரியாக இல்லாத காரணத்தால் அரசு தரப்பில் மீண்டும் அரசாணை 12 ஐ திருத்தம் செய்து வெளியிடுவதற்கு அவகாசம் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிகின்றன.



*நீதிமன்ற தீர்ப்பாணை வெளியான பின்புதான் முழு விவரங்களும் தெரியவரும். மேற்கண்ட வழக்குகளால் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்னும் ஒரு சில நாட்களுக்கு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.


*நமது SSTA தரப்பிலிருந்து மாவட்ட மாறுதலில் விரைந்து நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறோம். அரசு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது விரைவில் இப்பிரச்சினையை சரிசெய்து மாவட்ட மாறுதல் நடத்துவதற்கு இன்னும் தொடர்ந்து அழுத்தம்



Post Top Ad