பள்ளிகளில் 8,000 கட்டிடங்களை இடிக்க முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 4, 2022

பள்ளிகளில் 8,000 கட்டிடங்களை இடிக்க முடிவு

 




தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் அனைத்து வகை அரசுப் பள்ளிகள் என்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.   இந்நிலையில், நெல்லையில் ஒரு பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் கணக்கெடுக்க  உத்தரவிடப்பட்டு அவற்றை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, 3, 482 பள்ளி வளாகங்களில் உள்ள 4,808 வகுப்பறை, உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 8228 வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


இது குறித்து தொடக்க கல்வித்துறை எடுத்துள்ள கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வித்துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 அரசு தொடக்க மற்றும் ந டுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இவற்றில் 25 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அவற்றில் பழுதடைந்த பள்ளிகள், பள்ளி வளாகங்களில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு வேறு கட்டிடங்கள் கட்ட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


அதன் படி பழுதடைந்த கட்டிடங்கள் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 9573, மொத்த பழுதடைந்த கட்டிடங்கள் 13,036, இதுவரை இடிக்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 3482, அந்த பள்ளி வளாகங்களில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 4808. இந்நிலையில், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 6033, அவற்றில் இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் எண்ணிக்கை 8228. நாளை சென்னையில் நடக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த கட்டிடங்கள் இடிப்பதற்கான ஆணைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



Post Top Ad