அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 21, 2022

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு

 
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்வது சட்ட விரோதம் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


அவ்வாறு 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, மேலும் அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 


மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.Post Top Ad