1 - 9ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 2, 2022

1 - 9ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதி அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

 




கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்தன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது: ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. அதே போல் 6-9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2-4 ம் தேதி வரை நடைபெறும்.

 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும்



தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது


6-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்


- பள்ளிக்கல்வித்துறை


Post Top Ad