ஆசிரியரிடம் பாரபட்சம் புகார் - தலைமை ஆசிரியருக்கு நிர்வாக மாறுதல் வழங்கி CEO உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 12, 2022

ஆசிரியரிடம் பாரபட்சம் புகார் - தலைமை ஆசிரியருக்கு நிர்வாக மாறுதல் வழங்கி CEO உத்தரவு - Proceedings

 


மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கட்டாய பணியிடமாறுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.


புகார் மீது நடவடிக்கை திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி முதுகலை ஆசிரியர் (தமிழ்) திரு.ஜெயபால் என்பாருக்கு மாற்றுத் திறனாளிக்கான ஊர்திப் படி பெற்றுத்தரப்படவில்லை என பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. K.எப்ரேம் என்பார் மீது புகார் குறித்து நடவடிக்கை மேற்கொண்டு நிர்வாக மாறுதல் வழங்குதல் 


திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் (தமிழ்) கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி திரு.பி.ஜெயபால் என்பாருக்கு மாற்றுத் திறனாளிக்கான ஊர்திப் படி (Conveyance Allowance) கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் பெற்றுத்தரப்படவில்லை எனவும், தனக்கு அப்பள்ளியின் சக ஊழியர்கள் உதவி செய்தால் அவர்களை திட்டுவதும், பார்வையற்றவர் என இழிவுபடுத்துவதாகவும் அப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.K.எப்ரேம் என்பார் மீது புகார் அளித்துள்ளார். 


தமக்கு அப்பள்ளியில் மனிதாபிமானத்துடன் உதவி செய்வதற்கு ஆசியர்களும், மாணவர்களும் உதவுகிறார்கள். ஆனால் அதையும் அப்பள்ளித் தலைமை ஆசிரியர் தடுத்து வருகிறார். மேலும் தான் பணிபுரிந்த காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் கற்பிப்பதும், 2019-2020ஆம் நிதியாண்டில் 100 சதவீதம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை தனக்கு எவரும் உதவி செய்யக்கூடாது என்றும் தன்னை தனிமைப்படுத்தும் வண்ணம் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.K.எப்ரேம் என்பார் மீது புகார் மனு பார்வை 1 மற்றும் 2.5 கண்டவாறு பெறப்பட்டது. பெறப்பட்ட புகார் மனு குறித்து மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியரை 31122021 அன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருகயாலதண்டாயுதபாணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திளனாளிகள் நல அலுவலர் திரு. சிவசங்கரன் அவர்கள் முன்னிலையில் நேரடி விசாரணை செய்யப்பட்டது. - விசாரணையின் போது புகாரில் குறிப்பிட்டது போல அப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருளப்ரேம் அவர்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டார் என உறுதியாக தெரியவந்துள்ளது என்பதால் அன்னாரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யுமாறு பார்வை 4ல் கண்டவாறு அறிவுறுத்தியதின்படி, அன்னாரை வேறு பள்ளிக்கு கீழ்கண்டவாறு நிர்வாக மாறுதல் வழங்கப்படுகிறது.


2 இம்மாறுதல் ஆணையை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றவோ இரத்து செய்யவோ இயலாது.


3. மாறுதல் ஆணை பெற்ற தலைமை ஆசிரியர் தமது பொறுப்புகளை மூத்த முதுகலை ஆசிரியரிடம் உடனடியாக ஒப்படைத்துவிட்டுப் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்.


4.சார்ந்த தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அறிக்கையினையும் புதிய பணியிடத்தில் சேர்ந்த அறிக்கையினையும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click Here To Download - CEO Proceedings - Pdf
Post Top Ad