முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 13, 2022

முகக்கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்!

 

முகக்கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.


முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.


அதில், பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


அந்த நடைமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ரூ. 200 அபராதம் வசூலித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Post Top Ad