“ மகிழ் கணிதம் ” - 2 Days Training For Teachers - SPD Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 12, 2022

“ மகிழ் கணிதம் ” - 2 Days Training For Teachers - SPD Proceedings

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கை ( PAB Minutes ) இதுவரை பெறப்படாத நிலையில் பார்வையில் காணும் Appraisal Report - இல் உள்ளபடி Innovation ( Elementary ) தலைப்பின் கீழ் , 6948 அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய செயல்பாடுகள் வழியாக கணித பாடத்தை கற்பிக்க ஏதுவாக “ மகிழ் கணிதம் ” என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இச்செயல்பாட்டின் நோக்கம் , அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணித பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணித பாடப் பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பிப்பதன் மூலம் அவர்கள் கணித பாடத்தை பயமின்றி மகிழ்வுடனும் , எளிதாக புரிந்து கொண்டும் , ஆர்வத்துடனும் கற்கவும் வழிவகை செய்வதாகும்.



 மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிமையாக மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பித்தல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் , மேலும் Covid -19 காரணமாக ஆசிரியர்களுக்கான பயிற்சியை இணையதள வழியாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இணையதளவழி பயிற்சி என்பதால் மாணவர்கள் கணித பாடத்தை எளிதில் புரிந்து கொண்டு மகிழ்வுடன் கற்கும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து கணித ஆசிரியர்களுக்கு மகிழ் கணிதம் சார்ந்து பயிற்சியினை முதற்கட்டமாக 20.01.2022 மற்றும் 21.01.2022 ஆகிய 2 நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.










Click Here To Download - Commissioner Proceedings - Pdf



Post Top Ad