10, 12 வகுப்பு திருப்புதல் தேர்வு-2022 நடத்துதல் - வழிமுறைகள் - Answer Script Label - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 15, 2022

10, 12 வகுப்பு திருப்புதல் தேர்வு-2022 நடத்துதல் - வழிமுறைகள் - Answer Script Label - CEO Proceedings

 


1.அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு மேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட NODAL பள்ளிக்கு சென்று வினாத்தாள்களை பெற்றுக்கொண்டு மந்தன முறையில் பள்ளிக்கு கொண்டு செல்லுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2.அனைத்து பள்ளிகளும் தங்களது பள்ளியின் பெயர் அச்சிடாத தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பள்ளிகளின் பெயர் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்தக்கூடாது.


3. பத்தாம் வகுப்பு வினாத்தாட்களை காலை 9.50 மணிக்கு தலைமையாசிரியர், இரு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.


4.பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாட்களை நண்பகல் 1.50 மணிக்கு தலைமையாசிரியர், இரு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.


5.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாட்களில் தேர்வு எண்ணாக நிரந்திர பதிவெண்ணை (PERMANENT REGISTER NUMBER) ஐ எழுதவேண்டும்.


6.பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாட்களில் தேர்வு எண்ணாக தங்களது கல்வி மாவட்ட பள்ளி எண்ணுடன் பின்வரும் வகையில் எழுதவேண்டும்.

உதாரணம்

MRKMOO1 001 இதில் MRKMOO1 என்பது கல்வி மாவட்ட பள்ளியின் எண் .001 என்பது மாணவருக்கு ஒதுக்கப்படும் எண் .இவ்விரு எண்களை சேர்த்து எழுத வேண்டும்.


7.தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும்.


8.தேர்வுகள் என்பதால் தனிக்கவனத்துடன் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் மந்தனத்தை கடைபிடிக்க வேண்டும்.


9.தேர்வு முடிந்தவுடன் விடைத்தாட்களை பாதுகாப்பாக கட்டி உறைகளில் இட்டு சீல் செய்து அதன் மேற்புறம் கீழுள்ள படிவத்தை ஒட்டி பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் அனைத்து விடைத்தாட்களின் கட்டுகளையும் பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.


"விடைத்தாள் திருத்தம் சார்ந்த வழிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும் "


ஒம்/முதன்மைக்கல்வி அலுவலர்

செங்கல்பட்டு




ANSWER SCRIPT LABEL






Post Top Ad