G.O 1144 - மழை காரணமாக விடுமுறை அளித்தால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? - அரசாணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 13, 2021

G.O 1144 - மழை காரணமாக விடுமுறை அளித்தால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? - அரசாணை

 

தொழில் நுட்பக் கல்வி - மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வருதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

கல்வி துறை

நாள்: 14 டிசம்பர் 1993

பார்வை: 

1) அரசுக் கடித எண். 84310 | ஜே/91, நாள்: 20.0192. 

2) கல்லூரிக் கல்வி இயக்குநர், கடித எண். 46042 / 75/ 92, நாள்: 29.07.92. 

3) பள்ளிக் கல்வி இயக்குநர், கடித எண். 34317/ டி3 | 1992. நாள்: 20.03.93. 

4) தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், கடித எண். 14357 / H5/91, நாள்: 18.03.93.


மழை, புயல், பந்த், கலவரங்கள் போன்றவை ஏற்படும் சமயங்களில் அன்றைய தினம் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு விடுமுறையென்று பொதுவாக அரசால் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிகழ்வுகளில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறையா என்றும், அந்நாட்களில் ஆசிரியர்கள், ஆசிரியரில்லாப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டுமா என்றும் ஐயம் எழுவதால், அது குறித்து அரசாணை  ஏதும் இருப்பின் அதன் நகல் அனுப்புமாறு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டதற்கு இப்பொருள் குறித்து பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநருடன் கலந்து, அங்கு பின்பற்றப்படும் நடைமுறை குறித்து அறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர்களிடமிருந்து மேற்படி இயக்ககங்களில் இது போன்ற நிகழ்வுகளில் பின்பற்றப்படும் முறை குறித்து பார்வை 2, 3-ல் காணும் கடிதங்களில் தகவல் பெற்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அனுப்பி இப்பொருள் குறித்துத் தெளிவான அரசு ஆணை ஏதும் இருப்பின் அதன் நகலை அனுப்புமாறும் முகப்புப் பத்தியில் கண்ட சூழ்நிலைக் காலத்தில் பயிலகங்களில் பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து பணியாளர்களும் ) எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான தக்க தெளிவுரை வழங்குமாறும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசை வேண்டியுள்ளார்.


2. மேற்படி தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் ஐயப்பாட்டினை அரசு கவனமாகப் பரிசீலித்தது. இந்நிகழ்வில் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பின்பற்றப்படும் முறையையே அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுமாறு அறிவுறுத்தலாம் என அரசு முடிவெடுத்தும் அதன்படி கடும் மழை, புயல், பந்த் கலவரங்கள் மற்றும் எதிர்பாராதசந்தர்ப்பங்கள் மற்றும் செலாவணி முறிச் சட்டப்படி அரசால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் போது, மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் ஆசிரியரல்லாப் பணியாளர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை என்றும், ஆனால் பள்ளி | கல்லூரி / முதல்வர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களின் முடிவின்படி விடுமுறை அளிக்கும் போது மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை. ஆசிரியரல்லா அமைச்சுப் பணியாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை கருதல் வேண்டும் என்றும், எப்படி இருப்பிலும், கல்வி ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட போல) நாட்களுக்குக் குறைவு ஏற்படுமாயின் அரசு விடுமுறை நாட்களில் கல்வி நிறுவனங்கள் நடைபெற்று குறைவுபடும் வேலை நாட்களை ஈடு செய்ய வேண்டும் என்றும் அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ஓம்!- ஜெயந்தி, அரகச் செயலாளர்.

பெறுந தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை - 25.

/ உண்மை நகல்/











Click Here To Download - G.O 1144 - Pdf








Post Top Ad