"தம்பி, ஆசிரியர்கள் கவனிப்பார்கள்" ட்விட்டரில் லீவு கேட்டு குசும்பு செய்த மாணவருக்கு பதில் அளித்த அளித்த கலெக்டர்! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 27, 2021

"தம்பி, ஆசிரியர்கள் கவனிப்பார்கள்" ட்விட்டரில் லீவு கேட்டு குசும்பு செய்த மாணவருக்கு பதில் அளித்த அளித்த கலெக்டர்!

 

தமிழகத்தில் தொடர் மழை பெய்வதால் மக்கள் ஒருபுறம் அவதியடைந்தாலும், மறுபுறம் ‘நாளைக்கு ஸ்கூலு இருக்கா? இல்லையா?’ - என மாணவர்களின் புலம்பல் மாவட்டந்தோறும் பல வீடுகளில் ஒலிக்கிறது. வீட்டுல மட்டுமா? ஒரு மாணவர், நேரடியாக ட்விட்டரிலேயே கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது வைரலாகி வருகிறது. 


விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத் ரெட்டி. இவருக்கு ட்விட்டரில், ‘‘‘‘மழையால் திருவாரூர் மாவட்டத்துக்கு லீவு விட்டுட்டாங்க.  விருதுநகர் மாவட்டத்திலும் ரொம்ப மழை பெய்யுது சார்’’’’ என்று மாணவர் விஜய்சிவா விஷ்ணு கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த கலெக்டர் மேகநாத் ரெட்டி, ‘‘‘‘விடுமுறைக்காக உன்னுடைய தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு நன்றி. நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது தம்பி. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு 26.11.2021ம் தேதி மட்டும் விடுமுறை. இந்த விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி வீட்டு பாடத்தை முடி. ஆசிரியர்கள் சரி பார்ப்பார்கள். பாதுகாப்பாக இரு’’’’ என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.


இந்த நிலையில் டுவிட்டர் வாயிலாக மாணவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் டேக்  செய்து விடுமுறை கேட்டுள்ளார். அதன்படி நேற்றையதினம் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.


அதனை டுவிட்டர் பகுதியில் பார்த்த மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது சார் என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டினார். அதோடு அவரின் கமெண்ட்ஸில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியை டேக் செய்து பதிவு செய்திருந்தார்.


இதனை கண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி. இப்பொழுது நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது தம்பி என்று கூறினார்.


அதனால் நாளைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்த விடுமுறையை நீங்கள் வீட்டுப்பாடங்கள் முடிப்பதற்கு பயன்படுத்துங்கள் என்றும் அதனை ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.


இவரது செயல் பலருக்கும் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக காணப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இது போன்று செய்வது முதல் முறை அல்ல என்றும் இதற்கு முன்பு பொதுமக்களின் பலரின் கருத்துக்களுக்கு நேரடியாகவே அவர் பதிலளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இதே மாணவரான விஜய்சிவா விஷ்ணு, நவ. 10ம் தேதியன்று மழையால் மாவட்டத்திற்கு பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், ட்விட்டரில், ‘‘ நவ. 11ம் தேதிவிருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்படுமா?’’’’ என்று பதிவிட்டார். மாணவரின் இந்த பதிவைக் கண்ட கலெக்டர், ‘‘‘‘விடுமுறை இல்லை தம்பி... பள்ளிகூடம் போ. சூரியன் வெளியே வந்து விட்டது. படி... விளையாடு, மகிழ்வாய் இரு... நம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமென சாமியை கும்பிட்டுக்கோ’’’’ என்று பதிலை முடித்துவிட்டார்


Post Top Ad