' இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய 1.61 லட்சம் பேர் விண்ணப்பம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 12, 2021

' இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்

 





‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய இதுவரை 1.61 லட்சம்தன்னார்வலர்கள் விண்ணப்பித் துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில்தாமதம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில்தான் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. எனினும், அவை நேரடிக் கற்பித்தலுக்கு இணை இல்லாததால், பெரும்பாலான குழந்தைகளின் கற்றலில் தேக்கநிலை ஏற்பட்டது கண்டறியப்பட் டது.


இதையடுத்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.


பெண்கள் ஆர்வம்


இந்த திட்டத்தின்படி, பள்ளி நேரத்துக்குப் பின், மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, இதில் பணிபுரிய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஏராளமானோர் இந்தப்பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.61 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், ‘‘விருப்பமுள்ளவர்கள்  illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இந்தத் திட்டம் தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பின்னர், இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




Post Top Ad