NEET - தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு- நவ.14-க்குள் பதிவிறக்கம் செய்யலாம். - Asiriyar.Net

Friday, November 12, 2021

NEET - தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு- நவ.14-க்குள் பதிவிறக்கம் செய்யலாம்.

 


நீட் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல்களை என்டிஏ  வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த நவ.1- ம் தேதி வெளியிடப்பட்டது.


இந்நிலையில் நீட் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்நகல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட அறிவிப்பு:


நீட் தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும்விடைத்தாள் (ஓஎம்ஆர் சீட்) நகல்அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டது.


எனினும், கணிசமான மாணவர்கள் தங்களுக்கு இன்னும் விடைத்தாள் நகல் கிடைக்கவில்லை எனபுகார் தெரிவித்தனர். இதையடுத்துமாணவர்களின் விடைத்தாள் நகல்கள் https://neet.nta.nic.in/  என்றஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் நவ.14-ம் தேதி இரவு 9 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம்.


தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பும் மேற்கண்ட வலைதளத்தில் உள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்





No comments:

Post a Comment

Post Top Ad