ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 12, 2020

ஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை

 






அரசு பள்ளிகளுக்கான, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நியமிக்கப்படுகின்றனர். 


கடந்த, 2004 முதல் இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, அதிக கல்வி தகுதி இருந்தும், பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாத நிலைமை உள்ளது. இடைநிலை ஆசிரியர்களாக, பல ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களும், முதுநிலை பட்டதாரியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களும், நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 



இதுகுறித்து, நீதிமன்றங்களில் நுாற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், பதவி உயர்வு குறித்த வழக்குகளில், பல்வேறு உத்தரவுகளும் பள்ளி கல்வித் துறைக்கு வந்துள்ளன.இந்நிலையில், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 58 ஆயிரத்து, 118 ஆசிரியர்களுக்கு, புதிதாக பணி மூப்பு பட்டியல், 2019 ஜூலையில் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலின் படி, ஆசிரியர்களின் பணி மூப்பு காலம் மற்றும் கல்வி தகுதி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கினால், வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என, பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. 


எனவே, வரும் காலங்களில் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, இந்த பட்டியலைப் பயன்படுத்தி, கருத்துரு தயாரிக்க உள்ளதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post Top Ad