எத்திசை நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும்? - Asiriyar.Net

Post Top Ad


Monday, January 11, 2021

எத்திசை நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும்?


கிழக்கு பக்கம் தலை வைத்து தூங்குவது உத்தமம். வடக்கே தலை வைத்து தூங்கக் கூடாது. இதற்கு ஒரு பாடல் கூட உண்டு

நன்று தெற்கு வேண்டாம் மேற்கு
தவறு வடக்கு உத்தமம் கிழக்கு


கிழக்கு சூரியன் உதிக்கும் திசை என்பதால் அத்திசை நோக்கி செய்யும் காரியங்கள் சூரியன் எழும்பி வருவதைப் போல் வளரும் என்று நம்பிக்கை. அதனால் தான் காணிக்கை, தானம், புதிய ஆடை பெரியவர்களிடம் ஆசிர்வாதம் என்பவை ஏற்று வாங்கும் போது கிழக்கு முகமாக நின்று கொண்டு வாங்கி வந்தனர். 


வீட்டில் பூஜை அறையும் கிழக்கு முகமாகவே அமைத்தனர். இதற்கு விஞ்ஞான காரணமும் உண்டு. பூமியைச் சுற்றி தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் (நெட்டலைகள்) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் (குறுக்கலைகள்) இரு காந்த வளையங்கள் கற்பிக்கின்றன.
அதில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் காந்த அலைகள் மிகவும் செறிவாக காணப்படும். இது தீங்கு விளைவிக்கும். நமது இந்தியாவின் வடக்கு தெற்கு அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் நெட்டலைகள் நமது பாதையில் அமைந் துள்ளதாலும், செறிவு குறைவாக காணப்படுவதாலும் உடல் நலத்திற்கு மிகவும் பயனள்ளதாக உள்ளது. 


சூரியலும், சந்திரலும் நட்சத்திரங்களும், கிரகங்களும் இந்த வளையம் வழியாக பூமியைச் சுற்றிலும் நமது காந்த சக்தியை செலுத்துவதாலும் நாம் அவற்றில் இருந்து கிடைக்கும் சக்தியையும் பெறமுடிகிறது. இவ்வாறு பார்த்தால் கிழக்கின் சக்தி மிக மேன்மையானது அதனால் தான் அனைத்து செயல்களுக்கும் கிழக்கே பிரதானம்

Recommend For You

Post Top Ad