பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம்- மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 6, 2020

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் கடினம்- மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து






பிளஸ் 2 தேர்வில் ஆங்கில வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வுஎளிதாக இருந்தது. அதைத்தொடர்ந்து ஆங்கில பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,012 மையங்களில் 8.35 லட்சம் மாணவர்கள் தேர்வுஎழுதினர். மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆங்கில பாட ஆசிரியர் அமுதவல்லி கூறும்போது, ''காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் வழங்கப்பட்ட வினாத்தாளை முன்மாதிரியாக வைத்துதான் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்தோம்.

மாணவர்களுக்கு சிரமம்

ஒரு மதிப்பெண் வினாக்களில் 5 கேள்விகளும், கடிதம் எழுதுதல் மற்றும் துணைப்பாட பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் மறைமுக வடிவில் இருந்தன. வழக்கமாக பாடல் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், இம்முறை பாடல் பகுதியில் இடம்பெற்ற கேள்விகளை புரிந்து கொள்ளவே மாணவர்கள் சிரமப்பட்டனர். தமிழ்வழி படித்தமாணவர்களுக்கு இந்த தேர்வுமிகவும் கடினமாக இருந்திருக்கும்''என்றார்.

இதற்கிடையே 11-ம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 6) நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,012தேர்வு மையங்களில் 8.32 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதைத் தொடர்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெறஉள்ளன.

Post Top Ad