அறிவோம் தமிழ்புத்தாண்டு வரலாறு...! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 14, 2019

அறிவோம் தமிழ்புத்தாண்டு வரலாறு...!




உலகளவில் வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் ஆதிகாலம் தொட்டே தமிழர்கள்தான்... சாணக்கியரை அறிந்திருந்தால் அவரது மாணவனான சந்திர குப்த மெளரியர் பற்றியும் அறிந்திருப்போம். அவரது வம்சத்தில் வந்த 2 வது சந்திர குப்தன் தன்னுடைய பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக்கொண்டு தமது பெயரால் விக்கிரமசகம் என்னும் ஆண்டு முறையை உருவாக்கினான். அதனடிப் படையிலேயே 60 ஆண்டுகளுக்கும் வடமொழிபெயராக பிரபவ முதல் அட்சய ஆண்டு வரை தமிழ் வருடங்களின் பெயர்கள் அமைந்தது.

விஞ்ஞானத்தை கண்டறிந்த மூத்தோர்கள் பூமி சூரியனை நீள்வட்டப் பாதை யில் சுற்றுவதைக் கண்டு வானவீதியை 12 பாகங்களாகப் பிரித்தார்கள். அதுதான் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசியைக் குறிக்கிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு ஆண்டு காலம் ஆகும். ஆனால் பூமி சூரியனை சுற்றிவரும்போது வட்டத்தின் புள்ளியைக் கணிக்கவே சூரியன் பூமியின் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாதத்தை முதன்மையாக கணக்கிட்டார்கள். அம்மாதம் தான் சித்திரை மாதமாயிற்று. சித்திரை தொடங்கி பங்குனி வரையான 12 மாதங்களின் பெயர்கள் கூட அந்தந்த மாதங்களில் வரும் நட்சத்திரத்தின் பெயர்களை வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டது..


12 மாதங்கள், 12 ராசிகள் கொண்டு பகுக்கப்பட்ட ஆண்டில் பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் சூரியன் நிற்கும் போது சித்திரை மாதம், மேஷ ராசியைக் கொண்டிருக்கும். மேஷ ராசியில் உட்புகும் சூரியன் இந்த ராசியை விட்டு வெளியேறும் காலம் வரை சித்திரை மாதம் தொடரும். சூரியன் மேஷத்தில் உச்சமாக இருக்கிறான். அதனால் தான் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்ற ழைக்கப்படுகின்றன. அறிவியல் ரீதியாக இதையே புத்தாண்டின் தொடக்க நாளாக கொண்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்கள் முன்னோர்கள்.


சித்திரை மாதம் இளவேனிற் என்னும் வசந்த காலத்தின் தொடக்க காலம். இந்த வசந்த காலத்தில் தான் ஆன்மிக ரீதியாக புராண சிறப்பு பெற்ற கோயில்களிலும் திருவிழாக்கள் பெருவிழாக்களாக நடைபெற்றுவருகிறது. ஸ்ரீமந்நாரயணனின் முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரமும்,ஸ்ரீ இராம அவதாரமும் அவதரித்ததும் சித்திரையில் தான். மதுரை சித்திரைத் திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, திருவாரூர்த் தேர்விழா, சமயபுரம் மாரி யம்மன் உட்பட பெரும்பாலான கோயில்களில் தேரோட்டம் நடப்பது சித்திரை மாதம்தான்.

இத்தனை சிறப்பு வாய்ந்த சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Post Top Ad