பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர் / ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி!
பணியிடத்தில் என்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்களை கண்ணியத்துடனும், சமமாகவும் நடத்துவேன்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் சார்ந்த நடத்தைகளை மேற்கொள்ளமாட்டேன்.
என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும்போது அதைப்பற்றி எவ்வித தயக்கமும் இன்றி "பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013" -ன் படி புகார் அளிப்பேன் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்துவேன் என்றும் / உளமார உறுதியளிக்கிறேன்.
No comments:
Post a Comment