தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள் எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்கப்படுமா? - RTI Letter - Asiriyar.Net

Tuesday, November 9, 2021

தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள் எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்கப்படுமா? - RTI Letter

 

தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாதவர்கள்  எடுக்கும் மகப்பேறு விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிக்க கூடாது !!!. மேலும் சம்பளம் இதரபடிகள் உண்டு !


தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 - ன் பிரிவு 2 ( 0 ) மற்றும் 2 ( 0 ) ன் கீழ் விளக்கங்களோ , தெளிவுரைகளோ மற்றும் கேள்விகளுக்கு பதிலோ வழங்கிட வழிவகை செய்யப்படவில்லை . இருப்பினும் , தாங்கள் தகவல் எண் .3 முதல் 8 வரை கோரியுள்ள மகப்பேறு விடுப்பு குறித்த பொருண்மை தொடர்பாக அடிப்படை விதி 101 ( a ) - ன் கீழ் உள்ள நெறிமுறைகளில் ( Instructions ) - க்கு அரசாணை ( நிலை ) எண் .91 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த ( அ.வி.ஐ ) , துறை , நாள் 28.07.2020 - ல் வெளியிடப்பட்ட திருத்தத்தின்படி தகுதிகாண் பருவத்தினர் அரசுப் பணியில் சேர்ந்த நாளுக்கு மறு நாள் முதல் மகப்பேறுவிடுப்பு எடுக்க இயலும். 


மேலும் அவ்வாறு தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத ஒரு அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவரது ஈட்டிய விடுப்பு கணக்கிலுள்ள ஈட்டிய விடுப்பினை கழிக்க வேண்டிய அவசியமில்லை.


மேலும் , மகப்பேறு விடுப்பில் இருக்கும்போது மாத மாதம் ஊதியம் மற்றும் இதர படிகள் பெற்று வழங்க வேண்டும்.


மேலும் , இது குறித்த தகவல்கள் அடிப்படை விதிகளில் விதி 101 ( a ) ன் கீழ் உள்ள நெறிமுறைகளில்  ( Instructions ) மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 91 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த ( அவி . II ) த்துறை , நாள் . 28.07.2020 - ல் உள்ளது . இதனை தாங்கள் தமிழ்நாடு அரசு வலைதளத்தில் ( www.tn.gov.in/rules/dept/22 )- ல் காணலாம் .








No comments:

Post a Comment

Post Top Ad