குழந்தைகள் தின விழாவுக்காக, ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான, நவம்பர் 14ல் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து மாணவர்களுக்கும் நவ., 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், விளையாட்டு, கலை நிகழ்ச்சி போன்ற செயல்பாடுகள் தேவைப்படுகின்றன.
வரும் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதால், பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி பரிசளிக்க வேண்டும். குழந்தைகள் இடையே புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் உருவாக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment