தீபாவளி 2021 முதல் தீபாவளி 2022 வரை ஆண்டு ராசி பலன்கள் - Asiriyar.Net

Wednesday, November 3, 2021

தீபாவளி 2021 முதல் தீபாவளி 2022 வரை ஆண்டு ராசி பலன்கள்

 





தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி வந்துவிட்டால், அதன் பின் அடுத்த ஆண்டைப் பற்றிய எண்ணம் தான் பலரது மனதிலும் இருக்கும். குறிப்பாக அடுத்த ஆண்டு பொருளாதாரம் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எப்படி இருக்கும் என்று பெரும்பாலானோர் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொதுவாக மக்கள் செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழ லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். லட்சுமி தேவியும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.


ஆனால் கிரகங்களின் செல்வாக்கு அனைவரிடத்திலும் உள்ளது. முக்கியமாக இது ஒருவரது தொழில் மற்றும் நிதி நிலைமையை பாதிக்கிறது. இந்நிலையில், தீபாவளியில் இருந்து மகாலட்சுமி வருடம் தொடங்குகிறது. இது அடுத்த ஆண்டு தீபாவளி வரை இருக்கும். இக்காலமானது ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.


மேஷம் 

மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் அது நிறைவேறும். இருப்பினும் வேலை, வியாபாரம் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.


ரிஷபம் 

இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு சனி 9 ஆம் வீட்டில் இருக்கிறார். எனவே நீங்கள் உங்கள் தொழிலில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் வேலை செய்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். ஆண்டு முழுவதும் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் இருக்கும்.


மிதுனம் 

புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தங்கள் திறமைகளை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு, அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல், முடிந்தவரை உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


கடகம் 

தொழில் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சாதாரணமாக இருக்கும். தனியார் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் செய்பவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் நல்ல காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் அதன் பிறகு சில ஏற்ற தாழ்வுகளைக் காணலாம்.


சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்கள் மகாலட்சுமி ஆண்டின் தொடக்கத்தில் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 2021 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூட, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.


கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு மே மாதம் வரை வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் உங்கள் தொழிலைத் தொடங்குவதில் வெற்றி பெறலாம். மே மாதத்திற்குப் பிறகு வேலை அல்லது வியாபாரம் காரணமாக நீண்ட பயணங்கள் மேற்கொள்ளலாம். இருப்பினும், மே மாதத்திற்குப் பிறகு, நீங்கள் பணியிடத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


துலாம் 

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள். பலர் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலையின் அடிப்படையில் சிறப்பாக இருந்தாலும் கூட, கூடுதல் பொறுப்புகளால், வேலை அதிகமாக இருக்கும்.


விருச்சிகம் 

செவ்வாய்க்கு சொந்தமான விருச்சிக ராசிக்காரர்கள் கடின உழைப்பின் மூலம் ஆதாயங்களைப் பெறுவார்கள். வரும் ஆண்டு உங்களுக்கு சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் உங்களுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது, தகுதிக்கேற்ப வேலை செய்ய முடியுமா என்று சோதிக்கப்படுவீர்கள். உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டும்.


தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வசதியாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதே நேரத்தில் வீட்டில் உள்ளோரின் ஆதரவையும் பெறுவீர்கள். இது பணியிடத்தில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கும். மேலும் தனுசு ராசிக்காரர்கள் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் ஏற்படும்.


மகரம் 

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டியிருக்கும். உங்களின் உழைப்புக்கு ஏற்றவாறு தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், மே மாதத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம்.


கும்பம் 

கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை மாற விரும்பும் இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் நல்ல நிறுவனத்தில் இருந்து சலுகை கிடைக்கும். நீண்ட நாட்களாக அரசு வேலைக்கு தயாராகி வரும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். அத்தகையவர்கள் இந்த ஆண்டு வெற்றி பெறலாம்.


மீனம் 

மீன ராசிக்காரர்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவை கொள்வது, பணியிடத்தில் பிரச்சனையைத் தடுக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண புதிதாக ஏதாவது செய்வீர்கள். அதன் மூலம் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு குடும்ப வியாபாரத்தை நடத்தினால், இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும்.


Read more at: https://tamil.boldsky.com/insync/pulse/diwali-2021-yearly-horoscope-for-12-zodiac-signs-in-tamil/articlecontent-pf245147-032921.html






No comments:

Post a Comment

Post Top Ad