- எல்லா மனிதர்களுமே மற்ற மனிதர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் பெரும் சந்தோஷம் அடைகிறார்கள்
- எவர் ஒருவர் உங்களுக்கு எதை கொடுத்தாலும் அதில் பிரதிபலன் இல்லாமல் கொடுப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்
- குறிப்பிட்ட சில மனிதர்கள் மற்றவர்களை அடிமை படுத்துவதை சலிப்பில்லாமல் தொடர்ந்து செய்வார்கள் .நாம் அவர்களிடம் இருந்து விலகி சுதந்திரமாக நடக்க எந்த எல்லை வரைக்கும் வேண்டுமானாலும் செல்ல முயற்சி செய்ய வேண்டும்
- அனைவரின் வாழ்க்கை எப்போதுமே நியாயமாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம் எனினும், நீங்கள் உங்களுக்கான சிறப்பான ஒன்றை தேடி பெறும் விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
- தோல்விகள் அனைத்தும் மிகப்பெரிய பாடங்களே .அதே போல வெற்றி ஒரு பரிசுப்பொருள் அல்ல. உங்கள் கைகளிலே வந்து விழுவதற்கு! நீங்கள் தான் அதை தேடி அடைய வேண்டும்
- நம்முடைய கண்ணோட்டத்தை பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொன்றிலும் அவர்களுடைய கண்ணோட்டதையே பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்
- ஒரு காரியத்தை செய்ய முயன்று பாதியிலேயே கைவிட முயலும் போது நீங்கள் அந்த காரியத்தை எதற்காக தொடங்கினீர்கள் என்று யோசியுங்கள்.அப்படி பாதியிலேயே நிறுத்தி செல்லும்போது உங்களை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகலாம்
- யாராவது நம்மை அவமானப்படுத்தினாலோ அல்ல்து “முட்டாள் “ என்று திட்டினாலோ அவர்களை திருப்பி திட்டவேண்டாம். பதிலாக அவர்களை ஆசீர்வதியுங்கள். அது அவர்களுக்கு தலையில் நெருப்பை அள்ளி வைத்தாற் போலிருக்கும்
- ஒரு கெட்ட விசயத்திற்கு எதிர்வினையாக ஒரு கெட்டதை செய்யவேண்டாம். பதிலாக நன்மை செய்யுங்கள் அது அவர்களுடைய உள்ளத்தில் உள்ள கெட்டதை அழிக்கும்
- இன்னொருவருடைய நிழலிலேயே வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள். அவர்களுடைய எதிரி உங்களையும் அழிக்க வாய்ப்புள்ளது.அதே போன்று மற்றவர்களுடைய குறிக்கோளை உங்கள் குறிக்கோளாக்கி வாழாதீர்கள். அவர்கள் எங்கே சென்று முட்டி நிற்பார்கள் என்று உங்களால் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது
- எழுபது வயதுவரை வாழ்வது என்பது ஒரு ஆச்சர்யமூட்டும் விஷயமாக இருக்கலாம். ஆனால் எழுபதிற்கு மேல் என்பது ஒரு கொடைதான்..
- நீங்கள் ஒரு காரியத்தை தொடங்காதவரை ஒன்றுமே நடப்பதில்லை. எண்ணங்கள் மட்டும் போதாது, செயல்பட வேண்டும்
- நீங்கள் உழைப்பதை நிறுத்தி விட்டால் விரைவிலேயே இறக்க நேரிடலாம். உழைத்துக்கொண்டே இருங்கள்
- பல தடைகளை தாண்டி உங்கள் இலக்கை அடைவேதென்பது நீங்கள் தீட்டும் திட்டங்களை சார்ந்தே இருக்கிறது
- நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் உங்கள் 90 சதவீத நேரத்தை திட்டமிட மட்டுமே பயன்படுத்துங்கள்
- நீங்கள் ஒரு சுமாரான நபராக இருக்கும் பட்சத்தில் யாரும் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் சுமாராக இருப்பதிலிருந்து சூப்பராக மாறுவதற்கு பயங்கரமான தைரியமும், கடினமான உழைப்பும் தேவைப்படும் .யார் உங்கள் கஷ்டமான நேரங்களில் கூட இருக்கிறார்களோ அவர்கள்தான் உங்கள் சந்தோஷமான நேரங்களில் கூட இருக்க தகுதி வாய்ந்தவர்கள்
- உங்கள் மனதில் நீங்கள் தற்போது கஷ்டப்படுவதாக தோன்றினால் உண்மையிலேயே நீங்கள் அதற்காக சந்தோசப்படலாம். ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நாட்களை விரைவில் பார்க்க இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
- உங்களுக்கு நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நல்ல கோணத்திலேயே பாருங்கள்
- யாரிடம் எப்படி பேசுகிறீர்கள் என்பதில் கவனமாய் இருங்கள். இன்று நட்பாய் இருப்பவர்கள் நாளை எதிரியாகலாம்
- எப்படி இந்த காரியத்தை முடிக்க போகிறோம் என்று கவலை கொள்ளாமல் முடிக்க முடியும் என்பதை உள்ளபூர்வமாக நம்புங்கள்.தவறுகளை மன்னிப்பதே உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.