CPS - பழைய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட வல்லுநர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வது எப்போது ? கெடு முடிந்ததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம்!
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு , 5 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகளை இன்னும் சந்திக்கவில்லை. வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 23 - ம் ஆண்டு ஏப்ரல் 1 - ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர் கள் , ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தின்படி , அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் , தர ஊதியம் ( கிரேடு பே ) , அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் சிபிஎஃப் எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது....
No comments:
Post a Comment