தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை - மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு - Asiriyar.Net

Wednesday, March 4, 2020

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை - மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு







தமிழகம் முழுவதும் அரசு மேல் நி லைப்பள்ளிகளில் காலி யாக உள்ள தலைமை ஆசிரியர் , ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை வழங்கும்படி பள்ளிக்கல் வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது .

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை , மேல்நி லைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் முறை யில் இடமாற்றம் வழங்கப்பட்டது . கடந்த 2019ல் நடத்தப் பட்ட கவுன்சிலிங்குக்கு பின்னர் பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக நிரப்புவதற்கான நடவ டிக்கை தற்போது தொடங் கியுள்ளது . பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப் பன் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . ஜூன் 1ம் தேதி நிலவ ரப்படி தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள் , மாவட்டங்கள் , அந்த பள்ளியில் உள்ள மாணவர் , ஆசிரியர் எண் ணிக்கை ஆகிய விவரங்க ளையும் , இந்த பட்டியலில் இணைத்து witndse @ nic . in என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கு அனுப்பி வைக்க முதன்மை கல்வி அலுவ லர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர் . ஏற்கனவே காலி பணி யிட பட்டியல் தயாரிக் கப்பட்டிருந்தால் தற்போ தைய நிலவரப்படி , அதில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் , முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவு றுத்தப்பட்டுள்ளனர் .


இப்பணிகள் முடிந்ததும் , காலி யிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா முது நிலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு , தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு நியமிக்கப்ப டுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad