கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அட்டாக்!' - Asiriyar.Net

Monday, March 9, 2020

கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அட்டாக்!'



கொரோனாவிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அட்டாக்!' - பெங்களூரில் 6 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட காலரா!!

உலகம் முழுவதிலும் தற்போது பேசுபொருளாக உள்ள ஒரே விஷயம் `கொரோனா வைரஸ்.' கோவிட்-19 என்று அழைக்கப்படும் இதனால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் ஏராளம்.

 Corona Virus
மக்களிடையே கொரோனா ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில் தற்போது அவர்களை நோக்கிப் படையெடுத்துள்ளது மற்றொரு நோய்க் கிருமி!



கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் காலராவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 6 பேருக்குக் காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, காலரா தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி மருத்துவர்கள் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

 காலரா
காலரா, அதன் அறிகுறிகள் மற்றும் சுகாதார தற்காப்பு முறைகள் பற்றி மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்.

காலரா எப்படி ஏற்படுகிறது?

`விப்ரியோ காலரே' என்ற பாக்டீரியாவின் மூலம் `காலரா' நோய் ஏற்படுகிறது. இது மனிதர்களுக்கு அசுத்தமான குடிநீர் அல்லது சுகாதாரமற்ற உணவின் வாயிலாகப் பரவுகிறது.



இதன் வழியே வயிற்றின் உட்செல்லும் பாக்டீரியா நம் சிறுகுடலின் உள் நச்சுப்பொருள்களை உற்பத்தி செய்து வயிற்றுப்போக்கையும் (diarrhea), உடலில் நீர் இழப்பையும் (dehydration) ஏற்படுத்துகிறது. குறிப்பாகக் காலரா பாதிக்கப்பட்ட நோயாளியின் கழிவின் மூலம் இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும்.

 சிறுகுடல்
அறிகுறிகள்:

வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி, உடலில் நீரிழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகள். மேலும் சோர்வு, அதிக தாகம், வறண்ட சருமம், சோர்வான கண்கள், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உடலில் குளோரைடு, சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புகளின் இழப்பும் காலராவின் பொதுவான அறிகுறிகள்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

சுத்திகரிக்கப்பட்ட, தூய்மையான நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

கைகளை சோப் அல்லது ஹேண்ட்சானிடைசர் பயன்படுத்தி நன்றாகக் கழுவ வேண்டும் .

நன்றாக வேகவைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களைத் தோல்களைச் சீவிய பிறகு சாப்பிட வேண்டும்.

 குடிநீர்
சமையலறை மற்றும் கழிவறையை எப்போதும் தூய்மையாகக் கழுவிப் பராமரிக்க வேண்டும்.

உணவுப்பொருள்களில் ஈக்கள் மொய்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலராவுக்கான அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.



Post Top Ad