டெபிட், க்ரெடிட் (ATM ) கார்ட் வைத்திருக்கிறீர்களா..? அப்போ மார்ச் - 16'ம் தேதியே கடைசி நாள்..! ரிசர்வ் வங்கி அதிரடி - Asiriyar.Net

Monday, March 9, 2020

டெபிட், க்ரெடிட் (ATM ) கார்ட் வைத்திருக்கிறீர்களா..? அப்போ மார்ச் - 16'ம் தேதியே கடைசி நாள்..! ரிசர்வ் வங்கி அதிரடி





புதிதாக வங்கி கணக்கு துவங்கி, டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வாங்குபவர்கள் பெரும்பாலானோருக்கு ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளும் வங்கிகளால் சேர்த்தே கொடுக்கப்படுகிறது. பல வங்கிகளில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இணைய பரிவர்த்தனை சேவைகள் கிடைக்கிறது.

இருவழிகளிலும், ஆன்லைன் சேவைகளை பெற்றிருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பலர் இந்த சேவைகளை உபயோகிப்பதே இல்லை. இதனால் வங்கிகளுக்கு வீண் செலவீனங்கள் ஏற்படுகிறது.

இந்த நிலையை சரி செய்யும் பொருட்டு, 'ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை உடைய வாடிக்கையாளர்கள் வருகிற மார்ச் 16ம் தேதிக்குள் ஒருமுறையாவது ஆன்லைன் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் எனவும், அப்படி உபயோகிக்காதவர்களுக்கு, அந்த சேவைகள் துண்டிக்கப்படும்' என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

புரியும் படி சொல்லவேண்டுமானால், இணையதளங்களில் ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்கள் வாங்குவது. ATM கார்ட் மூலம் பஸ், ரயில் டிக்கெட் பதிவு செய்வது போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் உங்களுக்கு வேண்டுமானால், ATM கார்ட் வாங்கியதில் இருந்து ஒருமுறையாவது இப்படிப்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளை நீங்கள் செய்திருக்க வேண்டும்.

அல்லது மார்ச் 16க்குள், ஒரு பரிவர்த்தனையாவது நீங்கள் செய்ய வேண்டும். ஒருவேளை, 'ATMல் பணம் எடுக்க மட்டுமே நீங்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறேன். அதனால், எனக்கு இந்த சேவை தேவை இல்லை' என்பவராக இருந்தால் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

Post Top Ad