மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம் - Asiriyar.Net

Friday, March 6, 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம்






மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 31 கேள்விகளின் விவரம் வருமாறு!!

1. வீட்டு எண், 

2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 

3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 

4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 

5. வீட்டின் தற்போதைய நிலவரம், 

6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 

7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 

8. குடும்ப தலைவரின் பெயர், 

9. குடும்ப தலைவரின் பாலினம், 


10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 

11. வீட்டின் உரிமையாளர் விவரம், 

12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 

13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 

14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.

15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 

16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 

17. கழிவறை உள்ளதா? 

18. எந்த வகை கழிவறை? 

19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 

20. குளியலறை வசதி உள்ளதா? 

21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 

22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள்.

 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 

24. டெலிவிஷன் இருக்கிறதா? 

25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 

27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 

28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 

29. கார், ஜீப், வேன் உள்ளதா? 

30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 

31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. 

அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், 

1. பெயர், 

2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 

3. குடும்ப தலைவருக்கு உறவு, 

4. பாலினம், 

5. பிறந்த தேதி, 

6. திருமணமான விவரம், 

7. கல்வித்தகுதி, 

8. தொழில், 

9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 

10. பிறந்த இடம்,

 11. குடியுரிமை,

 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 

13. தற்போதைய முகவரியில் தங்கியுள்ள காலம், 


14. நிலையான முகவரி 

போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Post Top Ad