NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம்கோரி கல்வி அதிகாரி உத்தரவு. - Asiriyar.Net

Tuesday, February 11, 2020

NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம்கோரி கல்வி அதிகாரி உத்தரவு.




நாமக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான " NISHTHA TRAINING ' பயிற்சி வகுப்பின் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடுவது சமுக வலைதளங்களில் காணொளி காட்சியாக பரவியதாக புகார் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .



1 ) " NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எவரேனும் இருப்பின் அவர்கள் பற்றிய விவரங்கள்.

2 ) செப்டம்பர் 2019 மாதம் முதல் ஜனவரி 2020 மாதம் வரை தொடர்சியாக , ஒவ்வொரு மாதமும் 3 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் விவரங்கள் .


மேற்காணும் விவரங்களை இன்று 10 . 02 . 2020 பிற்பகல் 05 . 00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் , விவரங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நாமக்கல் வட்டாரம் - 1 மற்றும் நாமக்கல் வட்டாரம் - 2 ஐ சார்ந்த அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நாமக்கல்--அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான NISHTHA பயிற்சி வகுப்பில் நடனம் ஆடிய ஆசிரிய ஆசிரியைகளின் நடன வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் சம்மந்தப்பட்ட ஆசிரிய ஆசிரியைகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார்... அது  குறித்த விவரம் கோரி நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.

Post Top Ad