பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களே பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் நிலை இனி வராது என்று தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் மாணவர்கள்தான் தங்களுடைய கழிவறையை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே அதனை சுத்தம் செய்ய கூறுவதாகவும் புகார் ஆனது இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் அரச்சலூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுகுறித்து அவர், "இனிமேல் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் நிலை ஏற்படாது. சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை இயக்கி வருகின்றது." என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு குறித்து பேசிய செங்கோட்டையன், "முறைகேடு நடந்து இருப்பதாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் நலனுக்காக ரூ.78 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பெண் ஆசிரியர்களை நியமனம் செய்யப்பட்டு இருப்பதால், தேர்வு எழுதும் போது மாணவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது." என்று தெரிவித்துள்ளார்.