இன்றைய ராசிபலன் (24.02.2020)
மேஷம் :
கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்த முயல்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
ரிஷபம் :
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கலைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். செயல்வேகம் அதிகரிக்கும்.தொழில் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உடன்பிறந்தவர்களால் சாதகமான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.
மிதுனம் :
திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். பிறரின் வேலைகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள்.
கடகம் :
திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபமும், ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களால் தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
சிம்மம் :
பணிபுரியும் இடங்களில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வேலையாட்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மனைவியுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி :
சாமர்த்தியமான பேச்சுகளால் எண்ணிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மற்றவர்கள் கேட்ட உதவியை செய்து கொடுப்பீர்கள். சக ஊழியர்களால் சாதகமான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
துலாம் :
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் தேவை. இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சகம் :
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தத்தைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
தனுசு :
வியாபாரத்தில் வேலையாட்களால் ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
மகரம் :
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும். உறவினர்கள் வருகையால் செலவுகளுடன் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. மனைகள் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
கும்பம் :
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. பணிபுரியும் இடங்களில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.
மீனம் :
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.