வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம் - Asiriyar.Net

Tuesday, February 25, 2020

வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம்






சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை, தொடங்கியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 கோடியே 38 லட்சம் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில், ஒரு கோடியே 36 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை, வாட்ஸ்அப் மூ‌லம் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.



இதற்கு 7588888824 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்கள் தேவையைத் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிலிருந்து சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும்.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்ய ஒரு லிங்கும் எஸ்எம்எஸ் மூலம் வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இதில் கட்டண வசூலிப்பு, சரியான எடை உள்ளிட்ட கருத்துகளையும் புகார்களையும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.



மேலும் தெரிவித்த ஜெயதேவன், வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post Top Ad