8 நாட்களுக்குத் தொடர்ந்து முடங்கும் வங்கிகள்.. பணப்பரிவர்த்தனை தட்டுப்பாடு அபாயம்! - Asiriyar.Net

Wednesday, February 26, 2020

8 நாட்களுக்குத் தொடர்ந்து முடங்கும் வங்கிகள்.. பணப்பரிவர்த்தனை தட்டுப்பாடு அபாயம்!





பொதுவாக வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் போடப்படும். இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் நவம்பர் மாதம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது வரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இது குறித்து மத்திய நிதித்துறை அதிகாரிகள் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஜனவரி மாதம் 31 மற்றும் பிப்.1 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் இன்னும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக திட்டமிட்டிருப்பதால் மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வங்கிகள் செயல்படாத நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை, மார்ச் 9,10 ஹோலி பண்டிகை என்பதால் இந்த தினங்களில் வங்கிகள் செயல்படாது. இதனையடுத்து மார்ச் 11முதல் 13 வரை இந்திய வங்கிகளின் யூனியன் வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆகியவை இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் செயல் படாது. இதன் காரணமாக வங்கிகள் தொடர்ந்து 8 நாட்களுக்குச் செயல்படாத நிலை ஏற்படும். ஆனால், மார்ச் 9 ஆம் தேதி ஹோலி பண்டிகைக்கு பெரும்பாலான வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று வங்கிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad