10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 2019ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9.45 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ல் தொடங்கி ஏப்.,13ல் நிறைவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ்1 பொதுத்தேர்வு, மார்ச் 4ல் தொடங்கி மார்ச் 26ல் முடிகிறது. இதன் முடிவுகள் மே 14ல் வெளியாகிறது.
8.16 மாணவர்கள் எழுதும் பிளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 2 முதல் மார்ச் 24வரை நடக்கிறது. இதன் முடிவுகள் ஏப்.,24ல் வெளியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.