2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு !! - Asiriyar.Net

Thursday, February 27, 2020

2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு !!





கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்கு பதில் புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. மேலும், காகித பண புழக்கத்தை குறைக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் சிலர் 2000 ரூபாய் நோட்டுகளாக எளிதில் பதுக்க வாய்ப்பு உள்ளதால், 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தை படிப்படியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி முதல் கட்டமாக தனியார் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டு வினியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களே வைக்கப்படுகின்றன.

2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அரசு வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைப்பதை குறைத்துவிட்டனர். அரசு ஏ.டி.எம்.

மையங்களிலும் 500 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், ஏ.டி.எம். எந்திரங்கள் மூலமும் பொதுமக்கள் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய எந்தவித தடையும் இல்லை. என்றாலும், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.

மையங்களில் 2000 ரூபாய் நோட்டு வைப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டு வினியோகத்தை நிறுத்தும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஏ.டி.எம். மையங்களில் இனி 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைக்காது.

Post Top Ad