அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !
அனைவருக்கும் பயன்படும் முக்கிய தீர்ப்பு :-
அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால்,
அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது.
நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது.
மேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு,
எந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்
என்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அரசு ஊழியர்கள் மேற்கண்ட பட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும்.
அப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது
என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது.
ஆனால் இந்த சங்கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில்,
ஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
ஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது.
ஏற்கனவேK. Srinivasan Vs State of Tamilnadu and Others (W. P. NO - 13594 & 29192/2013
என்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என
Star Health And Alaid Insurance company Ltd Vs Sokkan And Others (2010-2-LW-90)
என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
அதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான்
என்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)